பக்கம் எண் :

182 வலம்புரி ஜான்


O

 

கவலையை விடுங்கள் ; களிப்போடிருங்கள்

கருத்தன் உங்களைக் கைவிடமாட்டான் !

 

O

 

வறியவரின் தாகத்தில்

தெப்பம் நீங்கள்...

வாழ்விழந்த உறவினரின்

வசந்தம் நீங்கள்...

இருட்டுக்குள் வாழ்வோர்க்கு

உதயம் நீங்கள்...

இன்பத்தைப் பங்குவைக்கும்

இதயம் நீங்கள்...

எந்நாளும் நாயனுங்கள்

பக்கம் நிற்பான்...

எப்போதும் நபிகளுக்கே

நிழலாய் ஆவான்...

இப்போது இமைக்கதவை மூடிக்கொஞ்சம்

இளைப்பாறல் அவசியமாம் என்றாளம்மா!

 

O

 

தூங்க வைப்பதற்காகவே

பாடவந்த தாய்மாரின்

மத்தியிலே...

உலகம்

விழிக்கவென்றே

பாடவந்த

மாநிலத்தாயான

மாநபியிடமிருந்து