பக்கம் எண் :

184 வலம்புரி ஜான்


தொடர்ந்து வருமா ?

இல்லை...

ஒதுங்கி நின்று

உறவை அறுத்திடுமா?

 

O

 

எவரிடம் நான் போவேன்?

எங்கே நான் புகன்றிடுவேன்?

கலங்கி நின்றார் அண்ணல்!

 

O

 

பங்கயக் கையில் வைத்து

படும் சுடர் காத்தல் போல

மங்கையர் தலைவியான

மாதவப் பிராட்டியன்று

மறுமொழி ஒன்று சொன்னார்.

மாநபி கேட்டிருந்தார்...

 

O

 

அடுத்தவர்கள் கேட்கட்டும்

கேட்காமல் போகட்டும்

உலகமே எதிர்த்தாலும்

உங்கள் பக்கம் நானிருப்பேன்.

நம்பி நான் நிற்கின்றேன்

நாயகமே நீர் தூதர்...

இறைவன் ஒருவன் தான்.