பக்கம் எண் :

186 வலம்புரி ஜான்


அண்ணலின் போதனை அடுத்தடுத்து சோதனை.. .
 

துளிகளின் தொகுதி நதியாகிறது !

 

O

 

உலகத்தை நமக்குக்காட்ட

உருவானோர் நாட்டில் உண்டு

உலகிற்கு நம்மைக்காட்ட

உழைத்தவர் ஏட்டில் உண்டு

நம்மையே நமக்குக் காட்ட

நாயகன் தெரிந்துகொண்ட

நயன்மிக்க ஆடி அன்றோ

நாயகம்என்ற நல்லார்!

 

O

 

இஸ்லாம் என்ற

கார்த்திகை நாள்

கண்ணளந்த சுடர்விளக்கை...

கலப்பு நெய்யூற்றி

கவிழ்க்கப்பார்த்தார்கள்!

 

O

 

அகலின் கொள்ளிடம்

அகலமாக இருந்ததால்...

இஸ்லாமிய தீபம்

நீர்த்துவிட்ட நெய்யிலும்

நெருப்பு நீச்சல் நடத்தியது !