பக்கம் எண் :

20 வலம்புரி ஜான்


O

பல் கட்டிக் கொண்டிருக்கிற

போலிப் புலிகளுக்கு

வீரவணக்கம் செலுத்துகிறார்கள் !

O

வெற்றி பெற்றவனுக்கே

இங்கே

விழா எடுக்கிறார்கள்.

அவன் -

எப்படி வெற்றிபெற்றான் என்று

எவனுமே கேட்பதில்லை.

O

நான்

பந்தயங்களில் தோற்றவன்

என்னைப்

போரிலாவது வெற்றிபெறவை !

O

தவறான முகவரியை எழுதி

உறைமுழுவதும்

முத்திரை குத்துபவர்களைப் பார்த்து

சுழிப்பே எனக்கு முகமாக விட்டது !

O

வெளிச்சத்தின் விலாசத்தை

எழுதி வைத்த

பிரபஞ்ச தபால்காரனே!