எனது இந்த பிள்ளைக் கிறுக்கலை முத்திரை குத்தி உரியவர்களுக்குச் சேர்ப்பது உனது பொறுப்புத்தானே ! O நான் இடிப்பதற்காகவே சுவர்கள் எழுப்புகிறவன் நீ சுண்ணாம்பு அடித்தாலும் அதில் ஒரு சுவையான செய்தி இருக்குமே ! O இறைவனே ! இது கவிதையாக இல்லாமல் போகட்டும். விதையாக இருந்தால் போதாதா? உனது உயிர்க்காற்றை இந்த விதைக்குள்ளே ஊது ! O இந்த உயிர்ப்பறவைக்கும் சிறகுகள் சேரட்டும் ! |