பக்கம் எண் :

22 வலம்புரி ஜான்


அது

வெளிச்ச அலகுகளால்

காலத்தின் கறுப்பை

கத்திரித்துப் போடட்டும் !

O

குறிக்கோள் இல்லாமல்

நீ

காட்டுப் பூவைக் கூட

சிரிக்க வைக்க மாட்டாய் !

மழை இங்கே

விசிறிக் கொண்டே விழுகிறது ...

காற்று இங்கே

இருமிக்கொண்டே நடக்கிறது ...

எல்லாவற்றிற்கும்

காரணம் இருக்கிறது !

O

நாயனே !

உப்புக் கல்லாக

இருக்கிற என்னை

ஒளி மிகுந்த வைரமாக

மாற்று - என்று உன்னைக்

கேட்கவில்லை !

O

புழுவாக இருக்கிற என்னைப்

பூச்சியாக மாற்றக் கூடாதா?