பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்23


O

உள்ளவயல்களை உழுது

எண்ணவிதைகளை நடுகிறவனே !

O

நீ

நீண்டவிடுப்பில்

இருக்கிறாயோ

என்கிற சந்தேகம்

தைமாத மேகத்தைப் போல்

என்னில்

தலைகாட்டிப் போகிறது !

O

அநியாயங்கள் பொடிபட

ஆண்டவன் அவதரிப்பான்

என்னும்

பிறந்தகத்தின் பிலாக்கணத்தால்

எனது காதுகள்

புத்த பிட்சுகளோடு

போட்டி போடுகின்றன !

O

எங்கள் ஊரில் ...

ஆயுதங்களை

சாமிகளுக்கு தந்துவிட்டு

ஆசாமிகள்

நிராயுதபாணிகளாக

நிற்கிறார்கள் !