பக்கம் எண் :

24 வலம்புரி ஜான்


O

அய்யனாரைக்

காவலுக்கு நிறுத்துகிறார்கள்.

அவர் களவு போனதற்காகப்

பிள்ளைப் பூச்சிகளிடத்திலே

பிராது கொடுக்கிறார்கள் !

O

இறைவனே

செயல்படச் சொல்லி - எங்களுக்கு

கை கால்களைக்

கொடுத்தாய் ...

O

நாங்களே -

நாக்குகள் இரண்டைத் தவிர

உறுப்புகள் அனைத்திற்கும்

வருடாந்திர

விடுமுறை விட்டுவிட்டோம் !

O

தொழுகை

உதடுகளின் ஊஞ்சலாட்டம் மாத்திரமா?

இதயத்தின் பெருமூச்சு மாத்திரமா?

அநியாயத்தைக் கரம் கொண்டு

எதிர்ப்பதும் அல்லவா?

O

இறைவா! எனக்கு

வலப்பக்கம்