பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்25


கர்ணனின் கை

இடப்பக்கமோ

குசேலனின் பை ...

எப்படியப்பா !

என் -

உப்பு நீர்ப்பூக்களை நான்

உலரவைக்க இயலும்?

O

என்

அலகுகள் ராஜாளியைப் போல ...

நகங்கள் பருந்தினைப் போல ...

தோற்றம் எருதினைப் போல ...

குரலோ சிங்கத்தைப் போல ...

இருந்தும் -

காகத்தின் சிறகுகளால் என்னை நீ

கட்டியதால் அல்லவா

இந்த

விசித்திரப் பறவையை

ஓணான்கள்

ஓரங்கட்டப் பார்க்கின்றன !

O

இறைவா !

உனது -

நீர்த்தொட்டிக்குள்

நீந்தி விளையாடுகிற

தங்க மீன் நான் ...

கண்ணாடிப்பெட்டிக்கு வெளியே