பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்239


தென்றல் வருகிற

திசை எங்கே என்று

கேட்டார்கள்.

ஈரத்துணியை

பிழிந்தால் தானே

கனமில்லாது போகும்?

காய்வதற்கு ஏதுவாகும்?

 

O

 

பார்க்கும் இடமெல்லாம்

பரமன் படைத்ததே

பாசமுள்ள மக்காள்

பறந்து நீவீர் செல்லலாம் -

உத்தம நபிகள்

உதிர்த்தார்!

 

O

 

ஒரு கை

விரல்கள் பலவெனினும்

சுட்டும் விரல் ஒன்றுதானே?

‘எந்த நாடு? என்று கேட்டனர்.

‘அபிசீனியா’ என்றார்

அண்ணல்.

அந்த அரசன்

நீதிமான் என்று வேறு

நீட்டினார்...

 

O