பக்கம் எண் :

242 வலம்புரி ஜான்


அவை கூடியது.

ஏசுமதத்தை

ஏற்ற மன்னனிடம்...

முஸ்லீம்கள்

சிலுவை மதத்திற்கே

சிறுமை உண்டாக்குவோர்...

ஆண்டுக்கணக்கில்

பற்றிய வேதத்தை

முற்றாய் உதறிய

மூடர்கள் இவர்கள்...

மக்கா திரும்ப

மார்க்கம் காட்டும்

என்றே ஓதினர்!

 

O

 

அடைக்கலப் பொருட்களை

அடமானம் வைத்திடும்

அந்தகன் அல்லன் ; அரசன் நான்.

புறாவை அரிந்து

சிபியே தின்றால்

தருமம் அன்றோ

தகர்ந்து போகும்?

என்றான் வேந்தன்.

 

O

 

நின்ற நிலையில்

சலாம் சொன்ன...

முஸ்லீம்களையே

முறைத்தான் சேவகன்.