பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்243


தலைவணங்குவது

தக்கவன் அல்லா

ஒருவனுக்கே தான் -

ஓங்கிய நபிமணி

உணர்த்திய வழி இது...

உரைத்தனர் அவர்கள்.

 

O

 

உங்களின் மார்க்கம்

என்னவென்றே

உரைத்திடும் உடனே!

மன்னவன் ஆணை;

 

O

 

மிருகங்களாக இருந்த எங்களை

மனிதர்களாக்கிய மார்க்கம்...

ஆயிரம் தெய்வங்களை

அடிபணிந்து

கிடந்த எங்களை

ஏகன் இறைவன் என்று

நெஞ்சு நிமிர்த்திய

நீதியின் பாதை...

 

O

 

ஏழைக்குத்தானம்

கட்டாயம் என்று...

எடுத்துக் காட்டிய