மண்ணுக்கேற்ற மாபெரும் மார்க்கம்... O நபிகள் நாயகம் ஆற்றுப் படுத்திய அற்புத மார்க்கம் எங்கள் மார்க்கம் - என்றனர் அவர்கள்... O வெளிச்சத்தில் வாழ விரும்பியதால்... இருட்டின் ஆதிக்கம் எங்களை - எழும்பவிடாமல் அழுத்தியது! O சூறைக்காற்றின் சுழற்சிக்குத் தப்பிய தேமல்கள் நாங்கள்... தென்றலின் தேசத்திற்கு - அகதிகளாக வந்துள்ளோம்... என்றனர். O நபிகளுக்கு வேதம் இறங்கியதாக விளம்புகிறீர்களே ! ஓதிக்காட்ட இயலுமா? ஊராள்வோன் கேட்டான். |