‘மரியம்’ என்ற பாவியப் பகுதியை ஓதினர் அவர்கள். O மன்னனும் அழுதான் ; மற்றவர் அழுதனர். உங்களின் வேதமும் எங்களின் வேதமும் ஒரு சுடர் பெற்ற இரு நாக்கன்றோ? O ஓதிய மறை ஒலி அணுத்திரள் எல்லாம் ஆட்சியைப் பிடித்தது! அல்லா சொல்லே அருமை வேதம் அய்யம் எனக்கு அணுவும் இல்லை... O மாடப்புறாக்களை... மந்தியின் கையில் தரவே மாட்டேன் ! மன்னவன் உரைத்தான்... O |