கிழக்கு வெளுத்தது எனினும்... இருளும் ஒளியும் பின்னிக்கிடந்தன... சூதுமதியினர் சூழ்ச்சி செய்தனர்... O ஏசு பெருமான் எம்மாம் பெரியவர்! குன்றின் அனையாரைக் குன்றிமணி என்று குறிப்பதே இவர் வேலை - குமுறினர். O அரசனின் மனக்குளத்தில் ஆயிரம் அலைகள்... நுரைப் பூக்களின் நூதன சங்கீதம்! O எங்கள் நபியைப் பற்றி என்னதான் எண்ணம் என்றான் அரசன். ஈசா நபி என்ற இயேசு பெருமான் அல்லாவின் நல்லடியார் - உத்தமராம் அவர் உதட்டில் உருவான சொல்லெல்லாம் அல்லா அமைத்தவைதான் அணுவளவும் அய்யமில்லை என்றனர். O |
|
|