பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்247


ஒரு கோடி மின்னல்

ஒன்றாகச் சேர்ந்து

மழையாக இறங்கி வந்தால்

மண்மார்பு வலிக்குமென்று

வானம் -

மேகமாக இறங்கியது...

அரசனின் மகிழ்ச்சிக்கு

அளவே இல்லை.

 

O

 

இது இனி உங்கள் நாடு ;

அரண்மனை உங்கள் வீடு ;

கறைசேறு படியாத

கனவான்கள் நீங்கள்...

பேரரசன் பேசிக்கொண்டே போனான்.

மசூதிகளிலிருந்து

கழுகுகளால் விரட்டப்பட்ட

மாடப்புறாக்கள்...

மாதா கோயிலின்

சிலுவை மரங்களில்

காலாற நின்றன!

        

O