பக்கம் எண் :

248 வலம்புரி ஜான்


எத்தியோப்பியாவின்

பழ மரப் பாத்திகளில்

அரேபிய விருட்சங்கள்

விதைகளாய் விழுந்தன.

நாடு கடத்தப்பட்டவர்களின்

பாத வளையங்களுக்குள்

நாடே நிழல் தேடியது!

அண்ணல் தலைக்கு அச்சாரம்!

 

O

 

அண்ணலைக் கொன்றால்

நூறு -

ஒட்டகங்கள் பரிசு...

அபூஜஹல் அறிவித்தான்.

 

O

 

உமர் என்ற வேங்கை

உறுமி எழுந்தது...

சதையைச் சந்திக்காமலேயே

சிவப்பைச் சிந்துகிற

வாளின் வாரிசு அவர்!

 

O