பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்249


அவரைப் பார்ப்பதற்கு

ஈச்சமரத்திற்கு

கால் கை முளைத்ததைப்போல

இருந்தது.

 

O

 

சூறாவளி -

போன வழியில்

சுற்றும் முற்றும்

சுழன்றது...

 

O

 

பெரியவர் ஒருவர் -

வாளுக்கு அடிக்கடி

விடுதலை தருகிற வல்லவனே...

எங்கே போகிறாய்

என்றவர் கேட்டார்!

 

O

 

நாயகத்தைக்

கொன்றுவிட்டால்...

தாயத்தாரிடமிருந்து

தப்புவது எப்படி -

என்றார்.