அண்ணலின் அற்புதம்! O தாழை மடல்தோறும் செம்பஞ்சுக்குழம்பெடுத்து பித்திகை அரும்புகளால் பின்னிராப் பொழுதில்... சந்திரன் - வெளிச்சத்தின் விலாசத்தை எழுதிக் கொண்டிருந்தான்! O அப்போது... நபிகளிடத்தில் குறைசிகள் கூட்டம் குதித்து வந்தது! O பூரணச் சந்திரனைப்பாரும் இதை - இரண்டாக நீர் பிளந்தால் இறைவனின் நபி நீர்தான் என்று நாநிலத்திற்கும் அறிவிப்போம் என்றனர்! |