வானை நோக்கினார் வண்ணத் திருநபி- ‘துஆ’ செய்தார் - சுட்டுவிரலால் சாடை காட்டினார்! O இரவில் ஒளிர்ந்த இன்பச் சந்திரன் இரண்டாய்ப் பிளந்து காட்சி தந்தான். அறுக்க ஆளில்லாமல் ஆரஞ்சுப்பழம் இரண்டாகி விட்டாலே அதிசயம் தானே! O நிலவு இரண்டாய் நீங்கிய பிறகும்... குறைசிகள் ஏற்பரா? O வசியமைக்கு நீர் வாரிசு! சூன்யத்தால் இதுவெல்லாம் சாத்தியம்தான் என்றனர். வெளிமாநிலத்தவர்கள்... அதிசயம் இதனைக் கண்டோம் என்று அறைந்தால் தான் என்றார்கள்! O |
|
|