பக்கம் எண் :

256 வலம்புரி ஜான்


தாயத்தாரைத் தள்ளி வைத்தனர் !
 

O

 

நண்டுகள் மாநாடுபோட்டு

நாட்டியக்காரிகளுக்கு -

கோணல்களே

கால்களாகிவிட்டதாகக்

கதைவிட்டன.

 

O

 

நபிகளின் தாயத்தாரை

நாசக்காரர்கள் தள்ளிவைத்தனர்.

நீர்முட்டைகள் ஒன்று சேர்ந்து...

ஆமைகள் அலிகள் என்று

அறிவித்தன !

 

O

 

குகை மனிதர்களான

குறைசிகள் -

வேதநாயகனின்

விந்தை மனிதர்களை

வேற்றுமைப்படுத்தினர் !

 

O

 

பரிசல் மிதவைகள்

படர்ந்து நின்று

பளிங்கு நீரைப்