பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்257


ஆராதனைக்குரிய தலத்தில்

அறிக்கை ஒன்று தொங்கிற்று !

 

O

 

வழிபடும் இடம்தானே...

வௌவால்களுக்கு

மறுவாழ்வு மையம் ?

 

O

 

குறைசியர் இனத்தில்

முகம்மது பிறந்த

உட்கிளையோடு

ஒட்டும் இல்லை ; உறவும் இல்லை -

மானம் மடிந்துபோன

தோலில் இந்த அறிவிப்புத்

தூங்கியது !

 

O

 

அது - பார்ப்பதற்கு...

சிவப்பு திருஷ்டிப் பொட்டுகளை

முகம் முழுவதும் வைத்துக்கொண்டு

பச்சை ஆடைக்குள் - உடலைப்

புதைத்துக் கொண்ட

ஆலமரத்தில்

கம்பளிப் பூச்சிகள்

தூக்கிப்பிடித்த சருகுஇலைபோல

இருந்தது !