பக்கம் எண் :

258 வலம்புரி ஜான்


மக்கா நகரின் வீதிகளில்

சண்டாளத்தனம்

சம்மணம் போட்டு உட்கார்ந்தது.

 

O

 

ஒரே நரம்பில்

சிவப்பு அணுக்களை

வெள்ளை அணுக்கள்

சீறி விரட்டின.

 

O

 

விரல் வழியாக

இசை இறங்கும்

வயலின் வாத்தியத்தில்

பாதி நைலான் நரம்புகள்

படுத்துக்கிடந்தன !

 

O

 

ஏழு சுரமும் ஒரு சுரமான

ஏந்தல் முகம்மது நபிகளான

ஏழாவது ஆண்டில்...

கொடுமை -

கொலு அமைத்தது !