பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்259


இன்றைய இந்தியாவில்

மஞ்சள் மகிமைகள்

கறுப்பு மலர்களை

நடத்துவதைப் போல

நபிகளின் மக்கள்

நடத்தப்பட்டனர்.

 

O

 

உண்ணக்கிடைக்காமல்

உறங்க முடியாமல்

வயிற்றுப் பிள்ளைகளும்

வாய்விட்டு அழுதன !

 

O

 

வளர்ந்தவர்களின் வயிறுகளோ...

அடைப்புகுறிகள் போல ஆயின !

 

O

 

பக்கத்து ஊரார் எவரேனும்

பண்டங்கள் விற்க வந்தால்...

நபிகளின் மக்கள்

பத்து மடங்கு

பணம் தரவேண்டும் -

பாவம் -

பணத்தை எண்ணியே

தேய்ந்த விரல்களில்...

இன்று -

எலும்புகள் தங்களை

எண்ணிக்கொண்டன !