பக்கம் எண் :

260 வலம்புரி ஜான்


நீதி கழுவேற்றப்பட்ட

மூன்றாமாண்டுக்கு

நினைவு நாள் வந்தது...

 

O

 

அதுவரை -

*   பனூஹாஷிம்கள்

பள்ளத்தாக்கில்

பதுங்கிக் கொண்டனர்.

பள்ளத்தாக்குகள்...

மலை முதலாளிகளை

உப்ப வைக்கும்

மண் தொழிலாளிகள்...

 

O

 

பார்ப்பவர் பார்த்தால்

பள்ளத்தாக்கும்

ஒருவகை உயரம் தான் !

 

O

 

இங்கே -

ஆடுகளுக்காவது

இலை, தழை கிடைத்தது.

ஆபிரகாமின் புத்திரர்களுக்கு...

சருகுகள் கூட

சரிவரக் கிடைக்கவில்லை !

* பனூஹாஷிம்கள் குறைசி இனத்தில் நபிகள் உதித்த உட்கிளை.