பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்261


மழலைப்பூக்கள்

மண்ணைத் தின்றன.

புலம்பல் ஒன்றே

பூபாளமானது.

 

O

 

அம்மாவாசை இருட்டில்

வழிதவறிப்போன

விண்மீன்கள்

காணவில்லை போட்டு

காத்திருப்பது போல

நான்கு நல்லவர்கள்

மூன்றாண்டுகளாக

முடியாத இரவுகளுக்கு

முகவுரை எழுதினார்கள்.

இரத்தத்தின் இரத்தம்.

உடன் பிறப்புகள்,

என்றெல்லாம்...

எதிர்க்குரல் எழவே

பாறை மனங்கள்

பதறிப் போயின !