பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்27


குடியானவனைப் போல...

நாயனே நீ

உனது

உள்ளங்கைக்குள்ளே

பதியம் போட்டு வைத்திருக்கிறாய் !

O

என் முகவரியை

அழிப்பதற்காக ...

எனது எச்சிலையே

சேமிக்கிறார்கள் !

O

என்னைப்

பழிப்பதற்கும் ...

பாதரசம் பூசிய - எனது

பதங்களையே

பயன்படுத்துகிறார்கள் !

O

என் -

உதடுகளை விதவையாக்கி ...

சொற்களில் கூந்தல்களைச்

சூறையாடுகிறார்கள் !

O

எனது வெள்ளை வியர்வையால்

எழுதப்பட்ட -

பூகோள வரைபடத்தில்