பக்கம் எண் :

28 வலம்புரி ஜான்


எனது விரல்களாலேயே

எனக்குச் சிறைச்சாலை கட்டுகிறார்கள்!

O

கண்களைத் திறந்தால்

இருட்டு !

கண்களை மூடிக்கொள்ளுகிறேன்

எதிரில் இருக்கும்

எல்லாம் தெரிகிறது !

O

நெரிசலில்...

தன்மையை

உணருகிறேன் !

O

தனிமையில்

கூட்டத்தைத்

தரிசிக்கிறேன் !

O

தராசின் முள் முனை

ஆடுவதைப் பார்த்ததுமே

அபிப்பிராயங்களை

ஆரோகணித்து விடுகிறார்கள் ...

நிலைக்கு வருவதற்காகத்தான்

முள்முனை - ஆடுகிறது என்பதை

அறிந்து கொண்டபிறகும்

அவசரம் காட்டுகிறார்கள் !