பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்29


O

இறைவனே !

ஒரு தீமையும்

ஒருநாளும் ஒழிவதில்லை.

அதே தீமைகள் -

வெவ்வேறு முகங்களில்

முகாமிடுகின்றன !

எல்லாம்

உன் ஏற்பாடுதானே!

O

ஆட்டின்வால்

அசைவதற்கே உன்சக்தி

அவசியப்படுகிறது.

ஊளையிடுகிற நரியின்

ஓசையை

ஒலியாக்கி ...

ராக ராஜாங்கத்தில்

சேர்த்துவிடுகிற

ரசவாதியே!

தீயவனுக்கும்

தீனி வைக்கிறவன் நீதானே !

O

சர்வசக்தியும்...

நீயாய் இருக்க

கள்ளிச் செடிக்கு மாத்திரம் - நீ

கருணை காட்டாமல்

இருக்க இயலுமா?