பக்கம் எண் :

30 வலம்புரி ஜான்


O

பாலைவனத்திலும்

மழை பொழிகிறது.

கடலுக்குள்ளும் மேகம்

கரையிறங்குகிறது ...

எல்லாம் உன் மாயம்

இறைவனே !

O

வித்தக விரல்களுக்கு

நீ - இருந்த

விபரங்களை அருளாமல்

அழுகிப் போன நகங்களை

உனது

ஞான நெய்யால்

அபிஷேகம் செய்கிறாய் !

O*

சங்கீதக்காரன் சொன்னது

சத்தியம் என்று ...

என்

மனத்திற்குள் விழுகிற

மழைத் துளிகளில்

இதயம் -

முகம் பார்த்துக் கொள்கிறது !

* தாவீது அரசனின் சங்கீதங்கள் (விவிலியம்)