பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்31


O

பக்கமேளங்களுக்குப்

பரிவட்டம் கிடைக்கிறது ...

நாயனக்காரனின் முன்னால்

நண்டுகள்

புளியங்காய்களைப்

புசிக்கின்றன !

O

நாதசுரத்திலிருந்து

நகரவேண்டிய

இசைவேள்விக்கு

எச்சில்

கால்கட்டுப் போட்டு விடுகிறது !

O

மலைகளை எடுத்து

என்மீது எறிகிறார்கள் ...

சூரிய விழுதால் எனக்கு

சூடு போடுகிறார்கள் ...

இருந்தும்

முனைமுறிந்து போகாத

என் எழுதுகோலுக்கு

மூடிபோட அவர்களால்

முடியவில்லை !

O

நாயனே ...

எல்லாம் உனது ஏற்பாடு.