தன்னைப் பிழிந்த தவம் ! O இது பிரபஞ்சப் பாத்திரத்திலிருந்து மனிதக்கலசத்திற்குள் கை நழுவி விழுந்த பிச்சைக்காசு. O இயற்கை தன்னை அஞ்சல் செய்வதற்காக அலைவரிசையில் நிறுத்திவைத்திருந்த சீதளக்கனவு. O பர்வதத்தை பல்பத்தால் ... நகர்த்த முனைகிற எனது பிள்ளைத்தனத்திற்காகப் பொறுத்தல் கேட்கிறேன். O இது ஒரு நாளின் ஆறாவது தொழுகை. |