பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்33


O

புல்லாங்குழலின்

பத்தாவது துவாரம் !

O

பதினோராவது கட்டளை.

O

வானத்தில் நடந்த

வளைகாப்பு வைபவம்.

O

பூமிப்பெண்ணை

புரண்டு படுக்க வைத்த

முதல் முத்தம்.

O

எழுதுகிற ஒருவன்

எழுதுகோலாகி

தன்னைப் பிழிந்த

தாளின்தவம்.

O

இது

ஆண்பால் ஆண்டாளின்

கிருஷ்ண பட்சத்து

குமார சம்பவம்

O

இது

பக்கத்து நிலத்துப்