பக்கம் எண் :

34 வலம்புரி ஜான்


பச்சைக் கொடி ஒன்று

இடம் பெயராமலே ...

இதயத்தை நகர்த்திய

சிந்துபாத் கதை.

O

இது

வாலிபம் வரைக்கும்

வயிற்றுத் தொட்டிலில்

வளர்ந்தே இருந்த

காலக்கனவு.

O

இது

சமிஞ்ஞைகள் இல்லாமலே

சம்பவித்துவிட்ட

பூரணம்.

O

தள்ளாடும் மேகப்பெண்களுக்கு ...

மின்னல்

மஞ்சள் பூசி மகிழ்கிறது.

O

தவளைகளோ

வரவேற்புப் பத்திரங்களை