| இறுதி நாளில் திரும்புவதற்காக இறக்கை விரித்தது. O நாயகம் மீண்டும் அனாதை ஆனார் ! O தேற்றுவாரின்றித் தேம்பினார் எங்கள் அண்ணல் ; ஆற்றுவாரின்றி அரற்றினார் எங்கள் வள்ளல் ; மடிமீது வந்தமர்ந்த மக்களைப் பார்த்துப் பார்த்து துடிதுடித்தழுதார் ; தரை வீழ்ந்த மீன்போலானார். O என்று நான் காண்பேன் எழில் மேகப் பந்தலென்றார் ;... எப்படி வளர்ப்பேன் பிச்சிப்பூத் தோட்டமென்றார் ;... துறைமுகத்தைத் தூர்த்து விட்டாய் ; கலங்கரைக்கு உன்னையல்லால் கதி எனக்கு இல்லையென்றார் ; வறியவர் வந்து நின்றால் வாரித்தருதல் நீதி ; மரணமே வந்து நின்று மாதாவே தருக என்றால் உன்னையே வழங்கலாமா ? உத்தமர் அழுகின்றாரே! |