பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்271


கனவாய் நீ ஆனபோதும்

கவிதையாய் வாழ்வாயம்மா !

தீன் குலத்தின் திருவிளக்கு

மண்ணில் தேய்ந்தது !

அல்லாஹு அக்பரென்றே

அன்பர் முழங்கினர்.

இஸ்லாமிய தீபம் வளர

நெய்யாய் ஆயினாய் !

இன்பத்தமிழ் எழுத்தில் நீயோ

மெய்யாய் ஆயினாய் !

தனிமரம் தோப்பாகாது என்ற

பழமொழி -

தொகுப்பிலிருந்து அன்று

தொலைந்துபோனது !

 

O

 

மனைவியே போனால் என்ன

மக்கள் தாம் மறைந்தால் என்ன

மறையவன் இருக்கும் போது

மாநபி தோப்புத்தானே ?

அப்பாவும் இல்லை - பெற்ற

அம்மாவும் இல்லை என்றால்

ஆண்டவன் ஒருவன் தானே

அனாதை ஆவானப்பா !