பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்277


வல்லினமும்

மெல்லினமும் கூட

தள்ளிவைத்த இந்த

இடையினத்தை

மெய்யெழுத்தாய்

உத்தம நபி மாற்றினார் !

 

O

 

விறகு ஒன்று

வீணை ஆனாது...

 

O

 

தவிட்டுப்புப்பறா ஒன்று

தமிழ்பாடத் தொடங்கிற்று !  

    

*