பக்கம் எண் :

278 வலம்புரி ஜான்


ஆயிஷா நாயகியின் ஆரோகணம் !
 

O
 

அப்துல் கஃபா

இஸ்லாத்தின் இதயம்.

 

O

 

அவரது மகளார்

ஆயிஷா பிராட்டியார்

இவர் -

கோடி நட்சத்திரங்களின்

கொலு மண்டபம் !

 

O

 

கொச்சி மஞ்சளில்

குழிபறித்த ஓவியம் !

 

O

 

வானவில்லின்

எட்டாவது வண்ணம் !

சுண்ட வைக்கப்பட்ட

சுக்கிரக்கோள் !

 

O

 

தாய்லாந்தும்

துர்க்மேனியாவும்

கை குலுக்கிக் கொண்ட

கந்தர்வ அழகு !