பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்279


எட்டுவயது மாத்திரமே

எட்டியிருந்த ஆயிஷாவை

அப்துல் கஃபா

அண்ணலுக்கென்று

அர்ப்பணித்தார்.

 

 

O

 

உறவுப்பாலத்திற்கு

ஆயிஷா பெருமாட்டி

அடிக்கல்லானார்.

 

O

 

பெரும் பெண் ஆகும்

காலம் வரைக்கும்

ஆயிஷா அம்மா

அன்னை இல்லத்தில்

வளர்ந்து வந்தார்கள்.

 

O

 

இஸ்லாமிய வானத்தில்

அப்துல் கஃபா
அபூபக்கர் ஆனார் !  
     

*