| முன்னறிவிப்பு இன்றி மூண்டதுபுயல் ! கண்மணியே ! கலங்காதே ! O எவருக்கும் தீங்கு எப்போதும் நினைக்காத எம்பெருமான் ஒரு நாள் வீதியில் விரைந்தார் ... O வளர்ந்த நெல் மணிகளின் வரவேற்பு மரியாதையை வரப்பின் மீது நடந்துகொண்டே அன்னப்பறவை பெறுவது போல... அக்காட்சி அமைந்தது ! O எந்தத் தோட்டத்திலும் முட்செடிகள் உண்டு. மூடன் ஒருவன் மண்ணை வாரி மாநபி தலையில் இறைத்தான். O மண்ணிலிருந்து வந்தவர் மண்ணுக்கே திரும்புவர் என்பதை எடுத்துக்காட்ட அரங்கேறும் நிகழ்ச்சியோ ஆரறிவார் ? |