| அம்மா இருந்திருந்தால்... அழுக்கான தலையை அத்தரில் ஆட்டியிருப்பாள். அருமை மகள் பாத்திமா கண்ணீரால் தந்தையின் தலையைக் கழுவினார் ! O கண்மணியே ! கலங்காதே கருத்தன் உனது தந்தையைக் கைக்குள் பொதிந்தே காத்திடுவான் - நபிகள் நவின்றார் ! O கோடைகாலம் வந்ததெனில் மாரிக்காலத்திற்கு அது... முன்னறிவிப்புத்தானே ! O வியர்வையில் ஆடுகிறது மேனி என்றால்... விழப்போகிற மழைக்கு அது வானிலை அறிவிப்பு அல்லவா ? |