| தாயிப்தோட்டத்தில் தத்துவத் தாறுமாறுகள்! O மக்கா நகரத்தை மூடர்கள் - மொத்தக் குத்தகைக்கு முழுவதுமாக எடுத்தனர் ! அண்ணலோ... விளக்குத் தண்டின் வெகு அருகிலேதான் நிழலிருட்டு நிற்கும் என்பதை அறிந்தார். O பிறந்த நகரம் பெருமைப்படுத்தவில்லை என்பதும்... தீர்க்க தரிசிகளுக்குத் திண்ணிய அடையாளம் அல்லவா ? O எட்ட இருந்த தாயிப் என்ற நகரில் இஸ்லாத்தை இறக்குமதி செய்ய நபிகள் நடந்தார். |