பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்285


அவர்கள்

சிரித்து முடிப்பதற்குள்

இரவுக்குச் சிறகு முளைத்துவிட்டது !

 

O

 

பூமி முழுவதும்

புடைத்த முட்கள்

பாதம் ஒன்றையே

பதம் பார்த்ததுபோல்...

பலப்பல ஆண்டுகள்

பட்ட பாட்டினை

பத்தே நாட்களில்

பட்டார் பெருமான் !

 

O

 

கற்களுக்கெல்லாம்

கைகள் முளைத்தன !

 

O

 

முட்டில் அடிபட்டு

நொண்டுகிற ஆட்டின் காலை

முழுவதுமாக

முறித்து விடுவது போல

தாயிப் நகரத்தார்

தவறிழைத்தார்கள்.