பக்கம் எண் :

286 வலம்புரி ஜான்


கிராமத்துக் கோடாங்கி

நாலுகால் வாலை

நறுக்கென்று குத்துவதுபோல

நபிகளின் உடலைக்

குலைத்தார்கள் !

 

O

 

கால்கள் முளைத்த

கரிய குன்றின் மீது

பாகனின் பஞ்சாயத்து முடிவடைந்து

அங்குசத்தின் சர்வாதிகாரம்

ஆரம்பமானது !

 

O

 

ஆலாப்பறவையின்

அலகில் அகப்பட்ட...

காரல் பொடிபோல

கசங்கினார் பெருமான் !

 

O

 

கல்லடி தாங்கமுடியாமல்

கால்சோர உட்கார்ந்தார்.

எழுப்பி வைத்து

எல்லோரும் அடித்தனர் !