பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்287


எலியைப் பூனைகள்

விளையாடி விளையாடி

வீழ்த்துவதைப்போல

நாயகத்தை

வதைத்தார்கள் !

 

O

 

திக்கற்ற தீனவர்களுக்குத்

திசைகாட்டும் கருவியாக

அல்லா வழங்கிய

காலக்கடிகாரம்...

எதிர்த்திசை எது என்று

அறிந்து கொள்ளாமலே

அணைச்செருகல் இல்லாத

தேரைப்போல

தெருவை இழுத்துக்கொண்டு

ஓடியது !

 

O

 

எதிர்ப்பட்ட

திராட்சைத் தோட்டத்தில்

சிறகொடிக்கப்பட்ட அந்த

செம்போத்து

சென்று விழுந்தது !

 

O

 

நல்லவேளை

மக்கா நகரத்து

மனிதர் ஒருவருக்கு

அந்த-

நிழற்படுக்கை

சொந்தமாக இருந்தது !