குருவியின் அலகுக்குள்
குவலயமே
குடிவந்ததுபோல
இரண்டே வரிகளுக்குள்
இலக்கியம் இறுகிக்கிடந்ததை
வேலைக்காரன்
வியந்து பார்த்தான் -
O
அவனது விழிப்புருவங்கள்
விற்களாயின !
பிறைக்கொரு
பிள்ளை பிறந்தது !
*