பக்கம் எண் :

290 வலம்புரி ஜான்


தொட்டிலுக்கே திரும்பினார் தூயவர்...!

 

O

 

அரேபிய போதிமரங்களால்

அணுக்கமாக நெய்யப்பட்ட

ஹீரா மலைக்குகைக்கு

நாயகம் திரும்பினார்.

 

O

 

ஜைதை அனுப்பி

ஊருக்குள் வரலாமா என்று

உசாவினார்.

 

O

 

வெள்ளம் வற்றிவிட்டதா

என்று பார்க்க

அன்று

நோவா பறக்கவிட்ட

சிறகுகள் முளைத்த

சதைக்கடிதமாக

ஜைது சென்றார்!

 

O

 

விரிப்பதற்கே

கைகளைப் பெற்றவர்கள்

உதடுகளைப் பிதுக்கினர்.

 

O

 

விடிந்தால்

கரைந்து விடுகிற

காகங்களுக்கு மத்தியில்...

கிழக்கினைக்கிழித்து

சூரியனை மூக்காலே கொத்தி

முன்னுக்கு இழுக்கிற

ராஜாளியும்

இருக்கத்தானே செய்கிறது ? !