பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்291


உருவிய வாளோடு

மாவீரர் ஒருவர்

நபிகளைச் சூழ்ந்தார்.

 

O

 

குறைசிகள் அவரை

கொதிப்பேறிய சொற்களால்

குளிப்பாட்டினர் !

 

O

 

வேண்டாம் இந்த

விபரீதம் என்று

தனிநாயகம் ஆனார்

தலைவர் கோமான் !

 

பஞ்சோடு அலைந்த பண்பாளர் !

 

O

 

மதிப்பிற்குரியவர் ஒருவர்

மக்கமா நகரம் வந்தார்.

குறைசிகள் அவரிடம்

நபிகளைப் பற்றி

நச்சுச் சொற்களால்

ஒரு

அரளிவனத்தையே

அமைத்துக்காட்டினர்.