| ஓதும் வேதம்-தமது செவிவயலில் சிந்திவிடப்போகிறதென்று பாவம் மனிதர் பஞ்சோடு அலைந்தார் ! O நாலாவது நாள் நடந்தார் அந்த நல்ல மனிதர். நாயகம் ஓதிய நாயன வேதம் காற்றுக்குத் தலைவாரிக்கொண்டிருந்தது! வழிதவறி வந்துவிட்ட வானவரோ-என்று வந்தவர் வியந்தார். O கண்கள் நாயகத்தை களவாடிக் கொண்டிருந்தபோதே அவரது காதுகள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன ! |