| நாயகத்தின் கால்களில் விழுந்தார். மிஞ்சிய கண்ணீரில் விழிகள் - மிதவைகளாயின ! O இல்லத்தின் கதவுகளை இன்பத்தென்றல் காத்திருந்து தட்டிய காலம் மாறியது ; தென்றலைத்தேடி தெருக்கள் புறப்பட்டன ! மந்திரவாதிகள் மாயம் ! O மந்திரவாதி ஒருவர் மக்கமா நகருக்கு வந்தார். எமன் நாட்டைச் சேர்ந்த சித்திரகுப்தர் இவர். மந்திரத்தால் மலையை நடக்க வைப்பேன் ; கடலைக் கைக்குட்டையில் ஒற்றிஎடுப்பேன் : நபிகளாவது... நாயகமாவது... என்று அண்ணலிடம் அவர் வந்தார். |